• Sun. Oct 13th, 2024

மகனுக்காக பிரகாஷ் ராஜ் மீண்டும் திருமணம்; முத்தங்களை பரிமாறும் வைரல் போட்டோ!

Prakash raj

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருபவர் பிரகாஷ்ராஜ். இப்போது தமிழில், அண்ணாத்த, எனிமி, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 2 உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் 1994 ஆம் ஆண்டு நடிகை லலிதகுமரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 2009 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

Prakash Raj

அதன் பின்னர் பிரகாஷ் ராஜ், இந்தி நடன இயக்குநரான போனி வர்மாவை காதலித்து, கடந்த 2010 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 24 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அவர்கள், தங்களின் 11 ஆம் ஆண்டு திருமண நாளை நேற்று கொண்டாடினர்.

அப்போது தங்களுடைய மகன் ஆசை பட்டதால் மீண்டும் ஒருமுறை திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் ராஜ், போனிவர்மா தம்பதி அன்பின் வெளிப்பாடாக முத்தங்களை பரிமாறிக்கொண்ட புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *