• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பகுதி சிவாலயங்களில் பிரதோஷ விழா

ByKalamegam Viswanathan

Feb 8, 2024

சோழவந்தான், தென்கரை, திருவேடகம், மன்னாடிமங்கலம், திருவாளவாயநல்லூர், பேட்டை ஆகிய கிராமங்களில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. தென்கரை அகிலாண்டேஸ்வரிசமேத மூல நாத சுவாமி கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர் உட்பட 12 அபிஷேகங்கள் நடந்து. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிரதோஷ விழாவை முன்னிட்டு சுவாமியும் அம்பாலும் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர் இதைத்தொடர்ந்து சிவ பக்தர்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டு சிவபுராணம் பாடி வந்தனர் இவ்விழாவை முன்னிட்டு செந்தில் அர்ச்சகர் சிறப்பு பூஜை செய்து பிரசாதம் வழங்கினார். இதில் பிரதோஷ கமிட்டி உள்பட பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை செயல் அலுவலர் பாலமுருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதே போல் சோழவந்தான் பிரளய நாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவிலிலும், திருவேடகம் ஏடகநாத சுவாமி கோவிலிலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ விழா நடந்தது. பிரதோஷ விழாவை முன்னிட்டு சுவாமி நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. சோழவந்தான் மற்றும் காடுபட்டிபோலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.