• Fri. Jan 17th, 2025

அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு துணைவேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

ByA.Tamilselvan

May 5, 2022

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசே துணைவேந்தரை நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டபேரவை கடந்த ஏப்.6ம்தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் 10ம் தேதி வரை சட்டபேரவை தொடர்ந்து நடைபெறும். இந்தநிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா மீது விவாதம் நடந்து வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வேந்தராக தமிழக முதல்வர் இருக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், துணை வேந்தரை ஆளுநருக்கு பதிலாக முதல்வரே நியமிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தினால் 3 உறுப்பினர்களை அரசு நியமித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இந்த மசோதா விவாதத்திற்கு பின் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.