ஐரோப்பிய நாடுகளின் பயணம் முடிவடைந்த பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை டெல்லி திரும்பினார். இந்தாண்டின் முதல் வெளிநாட்டு பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.மேலும், உலக நாடுகளை சேர்ந்த 50 தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தியதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்.
முதலாவதாக மே 2ல் ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, பெர்லினில் அந்நாட்டு அதிபர் ஃபெடரல் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகினார். மேலும் இரு நாடுகளின் நல்லுறவை வலுப்படுத்தும் ஐஜிசி(IGC) அமைப்பின் கூட்டத்திலும் பங்கேற்றார். அடுத்ததாக மே 3ஆம் தேதி டென்மார்க் பிரதமரின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற மோடி, இரண்டாவது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். இறுதியாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை சந்தித்துப் பேசினார்.
மூன்று நாள்கள் பயணம் முடிவடைந்த நிலையில், இன்று காலை பிரதமரின் பிரத்யேக ‘ஏர் ஒன்’ விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார்.