வேலை கேட்டு நூதன முறையில் மதுரையின் முக்கிய பகுதிகளில் போஸ்டர் ஒட்டிய இளைஞர்.
இன்றைய டிஜிட்டல் உலகில் பல்வேறு பட்டயப் படிப்புகளும், பொறியியல் படிப்புகளும் படித்து விட்டு இளைஞர்கள் வேலையை தேடி ஒருபுறம் அலைந்து கொண்டிருந்தாலும் தகுதிக்கேற்ப வேலையில் தங்களை ஈடுபடுத்தி பணி செய்து வருகின்றனர்.

பொதுவாக மதுரை என்றாலே நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் போஸ்டர் அடிப்பது வழக்கமான ஒன்றாக உள்ள வேலையில், .மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதிகளில் இளைஞர் ஒருவர் இரண்டு வெவ்வேறு போட்டோக்களுடன் போஸ்டர் ஒட்டியது அப்பகுதியை கடந்து செல்பவர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலை கேட்டு தன்னுடைய பெயர், வயது, தகுதி உள்ளிட்டவைகளை நூதனமாக போஸ்டராக அச்சடித்து ஒட்டியது குறிப்பிடத்தக்கது.