• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் அஞ்சலகங்கள் நாளை இயங்காது..,

ByK Kaliraj

Aug 1, 2025

விருதுநகர் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அஞ்சலகங்கள் நாளை2-8-25 சனிக்கிழமை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அட்வான்ஸ் போஸ்டல் டெக்னாலஜி 2.0 எனும் புதிய தொழில்நுட்ப சாப்ட்வேர் அறிமுகப்படுத்த இருப்பதால் அஞ்சலகங்களில் நாளை சனிக்கிழமை பரிவர்த்தனை நடைபெறாது.

சிவகாசி அஞ்சல் துறை கோட்ட கண்காணிப்பாளர் கூறியது அட்வான்ஸ் போஸ்டல் டெக்னாலஜி 2.0 என்னும் புதிய தொழில்நுட்ப சாப்ட்வேர் அனைத்து அஞ்சலகங்களிலும் அறிமுகப்படுத்த இருப்பதால் வரும் நான்காம் தேதி திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் எவ்வித பரிவர்த்தனையும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டிருந்தது .

ஆனால் புதிய சாப்ட்வேர் முன்னதாக அனைத்து அஞ்சல்களிலும் செயல்படுத்த இருப்பதால் நாளை சனிக்கிழமை எந்த பரிவர்த்தனையும் அனைத்து அஞ்சல்களிலும் நடைபெறாது ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் பரிவர்த்தனை வழக்கம் போல் செயல்படும் என தெரிவித்தார்.