• Tue. Dec 10th, 2024

பிரபல தமிழ் பாடகர் பம்பா பாக்யா திடீர் மரணம்

ByA.Tamilselvan

Sep 2, 2022

பிரபல தமிழ் பின்னணிப் பாடகர் பம்பா பாக்யா காலமானார். . இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘சர்க்கார்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சிம்டாங்காரன்..’, ‘எந்திரன் 2.0’ படத்தில் இடம்பெற்ற ‘புள்ளினங்காள்..’, ‘பிகில்’ படத்தில் இடம்பெற்ற ‘காலமே காலமே..’ போன்ற பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பம்பா பாக்யா. அவருக்கு வயது 49.அத்துடன், இவர் பாடிய ‘ராட்டி’ ஆல்பம் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து வெளியான ‘பொன்னி நதி..’ பாடலின் ஆரம்ப வரிகளை பாடியிருந்தார். மேலும், இன்னொரு பாடலையும் இப்படத்தில் பாடியுள்ளார்.இதுதவிர, ‘சர்வம் தாள மயம்’, ‘அன்பறிவு’, ‘இரவின் நிழல்’, ‘ஆக்சன்’, ‘ராட்சசி’ போன்ற திரைப்படங்களிலும், பல ஆல்பங்களிலும் இவரின் கனத்த குரலில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.
சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருடைய திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.