• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மரம் வேரோடு சாய்ப்பு… கதறிதுடித்து இறந்த பறவைகள்.. உருக்கமான வீடியோ!

Byகாயத்ரி

Sep 2, 2022

நிறைய பறவைகள் தங்கியிருந்த மரம் ஒன்று வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்டு பறவைகள் இறந்துபோன வீடியோ வைரலாகி வருகிறது.

ஒரு பெரிய மரத்தில் நிறைய காகங்கள் கூடு கட்டி வாழ்ந்து வந்துள்ளன. அந்த மரத்தை பறவைகளை வெளியேற்றாமலே வெட்டியுள்ளனர். இதனால் மரம் அடியோடு சாய்க்கப்பட்டபோது காகங்கள் பல கத்தியபடி கூட்டமாக பறந்தன. மரம் வேகமாக சாய்ந்து விழுந்ததில் கூடுகளில் இருந்த பறவை குஞ்சுகளும், குஞ்சுகளை விட்டு பிரிய மனமில்லா காக்கைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. மரம் விழுந்த சாலையில் காகங்களும், காக்கை குஞ்சுகளும் இறந்து கிடக்கும் காட்சிகள் பார்ப்போர் கண்களை கலங்க வைப்பதாக உள்ளது. இது இரக்கமற்ற செயல் என்றும், பிற உயிர்கள் மீது கருணையற்ற இந்த செயல் வேதனையை அளிப்பதாகவும் இயற்கை ஆர்வலர்கள் பலர் வேதனை தெரிவித்துள்ளனர். இது எந்த ஊரில் நடந்த சம்பவம் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.