• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..,

ByKalamegam Viswanathan

Jun 2, 2026

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியின் தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாக பல்வேறு செய்திகள் பரவிவரும் நிலையில் அவர் பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குவார் என்ற பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றனர்.

டெல்லி சென்று திரும்பும் அண்ணாமலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே சந்தித்து ஆதரவு பெற இருக்கிறார். அதன் பின்னர் புதிய கட்சியை தொடங்குவார் ‌போன்ற பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர் விஷ்ணு பிரசாத் மதுரை முழுவதும் அண்ணாமலை ரஜினி சந்திப்பது போன்ற சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார். அதில் அண்ணாமலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பூங்கொத்து கொடுப்பது போன்றும் ரஜினி நடித்த அண்ணாமலை திரைப்படத்தின் இடம் பெற்றிருக்கும் பாடல் வரிகளான சிங்கம் ஒன்று புறப்பட்டது.

அதுக்கு நல்ல காலம் பொறந்திருச்சு, நேரம் கனிஞ்சிருக்கு ஊரும் தெளிஞ்சிருக்கு, உண்மை புரிஞ்சிருக்கு, உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உள்ளது இரண்டில் ஒன்று பார்க்கும் வரை இரண்டு கண்ணில் இல்லை உறக்கம் என்ன அச்சிடப்பட்டுள்ளது. அண்ணாமலை ரஜினி சந்திக்கிறார் புதிய கட்சி தொடங்குகிறார் என்ற பல்வேறு தகவல்கள் வரும் நிலையில் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர் இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டி இருப்பது அதனை வெளிப்படுத்தும் வண்ணமாக இருப்பதாகவே அரசியல் வட்டாரங்களை பார்க்கப்படுகிறது.