• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் கையில் கிடைக்குமா? கணக்கில் வருமா?

Byவிஷா

Dec 20, 2024

வருகிற 2025ஆம் ஆண்டு, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசு ரூபாய் ஆயிரம் கைக்கு கிடைக்குமா? அல்லது கணக்கில் வருமா? என்பது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில் தமிழர் திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் வருடம் தோறும் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். அதன்படி சர்க்கரை, கரும்பு, அரிசி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவதோடு ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்படும். அந்த வகையில் அடுத்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரொக்க பரிசு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசாங்கம் ரொக்க பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துமா அல்லது ரேஷன் கடைகள் மூலமாக வழங்குமா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதாவது வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினால் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று கூறி வங்கிகள் பணத்தை பிடித்துக் கொள்ளும். இதன் காரணமாக ரேஷன் கடைகள் மூலமாகவே பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பணத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. மேலும் இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.