• Wed. Feb 12th, 2025

ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு நாளை

Byவிஷா

Dec 20, 2024

தமிழகத்தில் கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகள் நாளை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்;றி நிலையில், சமீபத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததால் சில மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்தத் தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில தேர்வும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சில தேர்வுகளும் நடைபெறவில்லை. இந்த தேர்வுகளை நாளை நடத்த வேண்டும் என்று தற்போது பள்ளி கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதன்படி 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 12ம் தேதி நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வு நாளை சனிக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.