• Tue. Feb 18th, 2025

மதுரை விமானநிலையத்தில் பொங்கல் விழா

ByKalamegam Viswanathan

Jan 13, 2025

மதுரை விமானநிலையத்தில் பொங்கல் விழாவில் கரகாட்ட கலைஞர்களுடன் நடனமாடி மகிழ்ந்த வெளிநாட்டினர்.

தமிழர்களின் தைத்திருநாள் பொங்கல் விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை விமான நிலையத்தின் சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டு விமானநிலைய பணியாளர்கள் விமான நிலைய வளாகத்தில் பொங்கல் வைத்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய கரகாட்ட கலைஞர்கள், கிராமிய இசைக் கலைஞர்கள் நடனம் ஆடினர். இதனைக் கண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாரம்பரிய கலைஞர்களுடன் சேர்ந்து குத்தாட்டமிட்டு பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.