• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

போணக்காடு எஸ்டேட்டில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு..!

Byஜெபராஜ்

Oct 16, 2021

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் போணக்காடு எஸ்டேட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.


அகஸ்தியர் கூடம் எனும் அகஸ்தியர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. போணக்காடு அகஸ்தியர் கோவிலுக்கு செல்பவர்கள் வனத்துறையின் அனுமதி பெற்று விதுரா வழியாக போணக்காடு வருவார்கள்.

இங்கிருந்து நடைபயணமாக உச்சி மலை மீது ஏறி அகத்தியர் கோவிலுக்கு செல்வார்கள். இந்த மலை உச்சிகளில் இருந்து வரும் வெள்ளம் தான் பேப்பாரை எனும் அணைக்கட்டுக்கு செல்கிறது. இந்த அணைக்கட்டு நெடுமங்காடு திருவனந்தபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.