தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஜீவன் டிரஸ்ட் நிறுவனர் முருகேசனுக்கு மாவீரர் அசோகர் ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி தனியார் ஹோட்டலில் இந்திய கண சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது .விழாவிற்கு டாக்டர் முத்துசாமி தலைமை தாங்கினார். விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மக்கள் நலப்பணிகளான கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், நில உரிமை மற்றும் சமூக நீதிக்கான பணிகளை சிறப்பாக செய்த ஆண்டிபட்டி ஜீவன் டிரஸ்ட் நிறுவனர் முருகேசன் அவர்களுக்கு, டாக்டர் முத்துசாமி அவர்கள் மாவீரர் அசோகர் ஆளுமை விருது வழங்கி கவுரவித்தார். விருதுபெற்ற முருகேசனை பல்வேறு அறிஞர்களும் ,சமூக ஆர்வலர்களும் பாராட்டினர்.
இதனைத்தொடர்ந்து விருதுபெற்ற முருகேசன் பெரியகுளத்தில் உள்ள கைலாசபட்டியில் முன்னாள் முதலமைச்சரும் ,தற்போதைய எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ .பன்னீர்செல்வம் அவர்களிடம் விருதினை காட்டி பாராட்டு பெற்றார்.