• Fri. Mar 29th, 2024

அரசியல் டுடே செய்தி எதிரொலி ஓட்டுநர் நடத்துநர் சஸ்பெண்ட்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு பேருந்தில் இருந்து நரிக்குறவன் நரிக்குறத்தி குடும்பத்தினரை இறக்கி விட்டதோடு அவர்களின் உடைமைகளை தூக்கி ரோட்டில் வீசிய அரசு பேருந்தின் ஓட்டுனர், மற்றும் நடத்துனர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி சென்ற பேருந்தில் ஏறிய நரிக்குறவர் குடும்பத்தை சேர்ந்த முதியவர் மற்றும் மூதாட்டி அவர்களுடன் இருந்த சிறுவன் ஆகிய 3 பேரை பேருந்தின் நடத்துனர் இறக்கி விட்டதோடு அவர்களின் உடமைகளை தூக்கி சாலையில் வீசி எறிந்த வீடியோ காட்சிகள்

சமூக வைரலான நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொண்ட நெல்லை மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்த நெல்சன் என்பவரையும் நடத்துனராக பணிபுரிந்த ஜெயபாலன் என்பவரையும் தற்காலிக பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர், நரிக்குறவர் குடும்பத்தினர் பேருந்தில் சக பயணிகளுக்கு இடையூறாக சத்தம்போட்டு கொண்டிருந்ததால் சக பயணிகள் பேருந்து நடத்துனர் இடம் நரிக்குறவர் குடும்பத்தினரை இறக்கிவிட வலியுறுத்தியதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறியுள்ள அதிகாரிகள் பயணிகளிடம் தரக்குறைவாக நடக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *