• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விவசாயிகளின் வெற்றி… உண்மையின் வெற்றி.. – ராகுல் காந்தி

Byமதி

Dec 10, 2021

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் திரும்ப பெறப்பட்டு, அவர்கள் போட்டிருந்த கூடாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் கட்சி வரவேற்று உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்க்தில், கடந்த ஓராண்டாக நடந்த இந்தப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்து, இது உண்மையின் வெற்றி. போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளின் தியாகம் எப்போதும் நினைவு கூரப்படும் என பதிவிட்டிருந்தார்.

இதுபோல, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, விவசாயிகளின் மன உறுதி வென்று இருக்கிறது, அதிகாரத்தின் ஆணவம் தோல்வி அடைந்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.