• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : ஏ.டி.ஜி.பி..!

Byவிஷா

Nov 28, 2023

தனிப்பட்ட நபர்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏ.டி.ஜி.பி. சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அனைத்து காவல்துறை உயரதிகாரிகாரிகளுக்கும் சட்டம்- ஒழுங்கு டிஜிபி அருண் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்..,
“போலீஸ் ஸ்டிக்கரை தனிப்பட்ட இருசக்கர வாகனம், கார்களில் பயன்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தங்கள் வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.