• Mon. Apr 29th, 2024

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு : வெள்ள அபாய எச்சரிக்கை..!

Byவிஷா

Nov 28, 2023

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர் இருப்பைக் கண்காணிக்கும் பணிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். புழல், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பூண்டி – 9 செ.மீ., சோழவரம் – 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. புழல் ஏரிக்கான நீர்வரத்து 281 கனஅடியில் இருந்து 663 கன அடியாக உயர்ந்துள்ளது. சோழவரம் ஏரிக்கான நீர்வரத்து 174 கனஅடியில் இருந்து 231 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் 24 அடி உயரம் உள்ள ஏரியில் 22.29 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இந்நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் 19 கண் மதகில், 3 ஷட்டர்கள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்ட நிலையில், கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *