• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்களை கைப்பற்றிய போலீசார்

தென்காசி நகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தென்காசி காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்து. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று தென்காசி அணைக்கரை தெரு பகுதியில் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு குட்கா பொருட்களை மாற்றி கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் கற்பகராஜ் மற்றும் காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்தனர்.

அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மாற்றிக் கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் அங்கிருந்த தென்காசியை சேர்ந்த ரமேஷ் பட்டேல், திருப்பத்தூரை சேர்ந்த அமரேஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள், 2 மினி லாரிகள் அந்த லாரியில் இருந்த ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.