

‘பிக்பாஸ்’ புகழ் உடன்குடி ஜி.பி.முத்து தூத்துக்குடி மாவட்டம் ஆட்சியரிடம், திருச்செந்தூர் அருகே உடன்குடியில் கீழத்தெருவை காணவில்லை என புகார் கொடுத்ததின் எதிரொலியாக. ஜி.பி.முத்துவின் வீட்டை முற்றுகையிட்டு வோம் என அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் கூறியதால், உடன் குடியில் உள்ள ஜி.பி.முத்துவின் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திரு்செந்தூர் அருகே உடன்குடியில் கீழதெருவை காணவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் ஜி.பி.முத்து புகார் அளித்திருந்தார்.அதைத்தொடர்ந்து ஜி.பி. முத்துவின் வீட்டை முற்றுகையிடுவோம் என பொதுமக்கள் கூறி இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

