• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

பழனி அருகே சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்கிய போலீசார் மாற்றம்..,

ByS.Ariyanayagam

Jun 12, 2026

பழனி அருகே சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்- வீடியோ வைரல் ஆகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி – கொடைக்கானல் மலைச்சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் கேரளாவில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் காரில் இருந்த வெளிமாநில மதுபான பாட்டிலைப் பறிமுதல் செய்த முதன்மைக் காவலர் அழகர் ரூ.500 பேரம் பேசி லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு மீண்டும் அதே மதுபாட்டிலைக் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், காவலர் அழகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.