• Fri. Mar 29th, 2024

போலீஸ் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்-மனைவி வலியுறுத்தல்

போலீஸ்காரர் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அவரது மனைவி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.

நாகர்கோவில் அருகே மேல சரக்கல் விளை என்ற இடத்தை சேர்ந்தவர் தங்கம் இவர் நாகர்கோவிலில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:எனது கணவர் ஜெகநாதன் களக்காடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு எனது கணவரை சிலர் கூட்டிக்கொண்டு போய் கொலை செய்துள்ளனர். இந்த கொலை குடிபோதையில் செய்ததாக ரவுடிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது ஏனென்றால் இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து எனது கணவரை கூட்டிக்கொண்டு போனவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஏழு நாட்கள் கழித்து பல திட்டங்கள் தீட்டி பின்பு எனது மகனை காணவில்லை கண்டுபிடித்து தரும்படி கடமைக்காக எனது மாமியார் ஒரு புகார் மனு ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.

எனது கணவர் கொலை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் என பல இடங்களில் அலைந்து போராட்டங்களுக்கு பிறகு தான் இறந்தது எனது கணவர்தான் என பேஷன் இம்போசிங் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை இதுவரை தெரியவில்லை பின்பு ராஜக்கமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் இறந்துபோனது ஜெகநாதன் இல்லை இது வேறு ஒருவருடைய உடல் என எங்களிடம் கூறி வழக்கை திசை திருப்பி விட்டார். எனது மாமியாரும் மாமனாரும் எனது கணவர் இல்லை என்று அது வேறு ஒரு உடல் பாகம் என என்னிடம் பல பொய்களைச் சொல்லி நாடகமாடி கொலை வழக்கை குற்றவாளிகளுக்கு சாதகமாக திசை திருப்பினார்.

பின்பு எனது கணவரை காணவில்லை என வழக்கு பதிவு செய்து வழக்கை முடிப்பதற்காக அவரின் உடல் பாகத்தை உரக்கிடங்கில் அனாதை பிணமாக அடக்கம் செய்தனர். பின்பு நான் மதுரை கோர்ட்டில் சிபிஐக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தேன் அந்த வழக்கை முடிப்பதற்காக மட்டும் கொலை வழக்கு நம்பர் பதிவு செய்து அப்படியே கிடப்பில் தள்ளினர்.

எனது கணவர் இறந்தது 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி இப்போது இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டாம் ஆண்டு ஆகிறது எனது கணவர் இறந்து 10 வருடம் ஆன நிலையில் இதுவரை கொலையாளிகளுக்கு சம்மன் கொடுக்கவே இல்லை ஒருமுறைகூட வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வரவில்லை.

திட்டமிட்டு வழக்கை கிடப்பில் தள்ளியுள்ளனர் எனது கணவர் வீட்டாரை விசாரணை செய்வதற்கு பல முறை புகார் மனுக்கள் கொடுத்தும் இதுவரை விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.இந்தக் கொலையில் மர்மம் மறைந்துள்ளது நான் கூறுவதை தயவு செய்து கருத்தில் கொண்டு இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட மாறு கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் பத்து வருடம் கடந்த நிலையிலும் எனது கணவரின் தலைப்பாகம் என்னிடம் ஒப்படைக்கப்படவில்லை ஆகவே எனது கணவரின் தலைப் பாகத்தை என்னிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் அதனை எனது கணவரின் ஊரில் அடக்கம் செய்வதற்கு பாதுகாப்புத் தர வேண்டும் எனஅந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *