• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் அதிரடி காட்டிய போலீசார்

Byமதி

Nov 6, 2021

தென் மண்டல காவல்துறை தலைவர் டிஎஸ். அன்பு, இ.கா.ப., (மதுரை) அவர்களின் உத்தரவின் பேரில் தென்மாவட்டங்களில் 30.10.2021-ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி குருபூஜை சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1544 நபர்கள் மீது இதுவரை 190 வழக்குகள் போடப்பட்டு, அதில் 33 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் காணொலி காட்சி மூலம் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்களை கண்டறிந்து, தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, 04.11.2011-ம் தேதி தீபாவளி திருநாளன்று உச்சநீதிமன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்து அவர்கள்மீது 233 வழக்குகள் போடப்பட்டு, 246 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் மது போதையில் வாகனம் ஓட்டிய நபர்கள் மீது 809 வழக்குகள் போடப்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.