• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

அதிமுக ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் – குழம்பி பேசியதால் பரபரப்பு..,

ByP.Thangapandi

Feb 24, 2026

உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் – நினைவு நாளா? பிறந்த நாளா? என அதிமுக ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் – குழம்பி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை அருகில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா-வின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி எம்எல்ஏ-வும் அதிமுக ஒபிஎஸ் ஆதரவாளருமான அய்யப்பன் தலைமையிலான நிர்வாகிகள், செல்வி ஜெயலலிதா திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர், தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.,

இந்நிகழ்வில் பேசிய எம்எல்ஏ அய்யப்பன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தில், பிறந்த தினத்தில் என குளம்பி பேசினார்., மேலும் அம்மாவின் ஆன்மா, எம்ஜிஆர் – ன் ஆன்மா எங்கு இருந்தாலும், எங்களையும் அண்ணன் ஒபிஎஸ்-யும் ஆசிர்வதிக்க வேண்டும் என பேசினார்.,