• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

24 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்துக் கொண்ட காவல்துறை நண்பர்கள்

Byகுமார்

Sep 23, 2024

24 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்துக் கொண்ட காவல்துறை நண்பர்கள் – பயிற்சிகால நினைவுகளை சுவாரஸ்யமாக பகிர்ந்து காவல்துறையினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

2000ஆம் ஆண்டு காவல்துறை பணியில் இணைந்து தமிழக முழுவதிலும் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பணியாற்றி வரையும் காவல்துறையினர் இன்று 24 ஆண்டுகளுக்கு பின்பாக ஒன்றிணைந்து கொண்டாடும் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழக முழுவதிலும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்திருந்த 2000ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த காவல்துறையினர் தங்களது காவலர் பயிற்சி காலத்தின்போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை குறித்து எடுத்துரைத்து பேசி மகிழ்ந்தனர் இதனையடுத்து தற்போதைய காவல்துறை சவால் பணிகள் குறித்தும், பேசி மகிழ்ந்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் ஒருவருக்கொருவர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு பணி பயிற்சிக்கு பின்னர் மீண்டும் சந்தித்து அவர்களுடைய பழைய கால நினைவுகளை பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சி தருணங்களை மறக்க முடியாததாக அமைந்ததாக தெரிவித்துக் கொண்டனர்.