பள்ளி மாணவ மாணவயரை காவல் நிலையம் அழைத்து வந்து காவல் நிலைய செயல்பாடுகள் நேரடியாக பார்வையிட்டு குழந்தை தொழிலாளர் மற்றும் POCSO விழிப்புணர்வு…
உலக குழந்தைகள் குற்ற தடுப்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சத்தியமங்கலம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குழந்தை தொழிலாளர் ஒழிப்பில் காவல்துறையில் பங்கு என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தி பள்ளிக் குழந்தைகள் சுமார் 50 மாணவ மாணவியர்களை காவல் நிலையம் அழைத்து வந்து ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்று காவலர்களின் படிநிலைகள், காவல் நிலையத்தின் செயல்பாடுகள், ஆயுதங்கள் பற்றிய விளக்கங்கள் மற்றும் வழக்கு பதிவு செய்யப்படும் நடைமுறைகள் மனு ரசீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் முறைகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் POCSO, போதை பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டும் பொழுது எடுக்கப்படும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி போட்டியில் வெற்றி பெற்ற ஆறு குழந்தைகளுக்கு காவல் ஆய்வாளர் முருகேசன் அவர்கள் பரிசு வழங்கி மீண்டும் வாகனம் மூலம் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.