• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நண்பனை கொடூரமாக வெட்டிக் படுகொலை செய்தவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

ByA.Tamilselvan

Apr 29, 2022

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அடுத்த புதுதாமரைபட்டியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற வாலிபர் நண்பரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கொலையாளிகள் போலீசார் தேடிவருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மீது கடலூர், பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரு சக்கர வாகனம் திருட்டு வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது.
செந்தில்குமாரை அவரது நண்பரான புதுதாமரைப்பட்டி அடுத்த சோலம்பதி கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் புது தாமரைபட்டியில் வீடு எடுத்து தங்க வைத்துள்ளார்.
இந்த நிலையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் செந்தில்குமாரை அருண்குமார் கயிறால் கட்டிப் போட்டு வெட்டி படுகொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் செந்தில்குமார் உடலை கைப்பற்றி ஒத்தக்கடை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்தில்குமாரை கொலை செய்த அவரது நண்பரான அருண்குமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.