• Wed. Jul 16th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

சவுக்கு சங்கரின் தாயார் ஆட்கொணர்வு மனுத்தாக்கல்

Byவிஷா

May 8, 2024

பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
யூடியூப்பரான சவுக்கு சங்கர், சமீபத்தில் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்ததாக கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தேனியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்தனர்.
பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் ஏப்ரல் 17ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கோவை சிறையில் சவுக்கு சங்கர் சித்ரவதைக்கு உள்ளாவதாகவும், மனித உரிமை மீறப்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சவுக்கு சங்கரின் தாயார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சம்பவம் தொடர்பாக நீதித்துறை விசாரணை நடத்த வேண்டுமெனவும், சவுக்கு சங்கருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.