• Fri. Apr 19th, 2024

அமெரிக்காவில் விமானம் நொறுங்கி
விழுந்து விபத்து: 4 பேர் பலி

அமெரிக்காவில் விமானம் நொறுங்கி விழுந்து விபத்தில் 4 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் ஸ்னோஹோமிஷ் நகரில் உள்ள ஹார்வி பீல்ட் விமான நிலையத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட 4 பேர் இருந்தனர். கிளம்பிய சிறிது நேரத்தில் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென உடைந்தது. அதை தொடர்ந்து அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில், இது குறித்து அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *