• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மத்திய, மாநில அரசு மூலம் மானியத்தில் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரத் தகடு அமைப்பதற்கு சிறப்பு முகாம்..,

ByP.Thangapandi

Oct 14, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் வீடுகளுக்கு சூரிய ஒளி மின் தகடு அமைப்பதற்கு மத்திய மாநில அரசு சார்பில் மானியம் மூலம் பெறுவதற்கு உசிலம்பட்டி பகுதி மக்களுக்கு சிறப்பு முகாம் செயற்பொறியாளர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்றது.,

இந்த சிறப்பு முகாமில் சூரிய ஒளி மூலம் ஒரு கிலோ வாட் முதல் மூன்று கிலோ வாட் உற்பத்தி செய்யும் இயந்திரத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் மானியங்கள் குறித்தும், விண்ணப்பம் விண்ணப்பிப்பது குறித்து உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை பொது மக்களுக்கு மற்றும் விவசாயிகளுக்கு வழங்கினர்.,

இதில் மின்வாரிய அதிகாரிகள், சூரிய ஒளி தகடு அமைக்கும் தனியார் நிறுவனங்கள், வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.,

மேலும் இந்தத் திட்டத்திற்கு வங்கிகள் மூலம் உடனடியாக கடன் வழங்கப்படும் எனவும் இந்த முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் ஆலோசனைகளை பெற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.,