• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வெளியூர் பேருந்து நிலையம் அருகே நைனாட்டம் அடித்து ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள்: கோவையில் பரபரப்பு!

BySeenu

Oct 14, 2026

​கோவை, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே போதையில் மிதந்த இளைஞர்கள் சிலர், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து சிறுநீர் கழிக்க முயன்றதுடன், தட்டிக்கேட்ட காவலாளியிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
​
கோவையின் மிக முக்கியப் போக்குவரத்து மையமான காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் மற்றும் அதனை ஒட்டி உள்ள வணிக வளாகப் பகுதிகளில் தினந்தோறும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் மற்றும் பயணிகள் வந்து செல்கின்றனர்.

​இந்நிலையில், நேற்று இரவு அப்பகுதியில் மதுபோதையில் இருந்த சில இளைஞர்கள் எவ்வித நாகரிகமும் இன்றித் தங்களது எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் அங்கு உள்ள ஒரு தனியார் நிறுவன அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற அந்த இளைஞர்கள், வளாகத்திற்குள் சிறுநீர் கழிக்க முற்பட்டு உள்ளனர்.
​
இதைக் கண்ட அந்த நிறுவனத்தின் காவலாளி மற்றும் ஊழியர்கள் உடனடியாக அவர்களைத் தடுத்து கண்டித்து உள்ளனர். ஆனால், போதையின் உச்சத்தில் இருந்த அந்த இளைஞர்கள், தட்டிக் கேட்ட காவலாளி மற்றும் ஊழியர்களிடமே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், நிறுவனத்தின் வாயிலிலேயே நின்று

தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டு உள்ளனர்.
​பொதுமக்களும் பயணிகளும் அதிகம் நடமாடும் காந்திபுரம் பேருந்து நிலையப் பகுதியில், இரவு நேரத்தில் வாலிபர்கள் போதையில் செய்த இந்த அட்டகாசத்தை அங்கு இருந்த பொதுமக்கள் சிலர் தங்கள் செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து உள்ளனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், காந்திபுரம் பகுதியில் போதையாசர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், காவல்துறையினர் இது போன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் வர்த்தகர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.