

கலைஞர் கருணாநிதி பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி, தென்பாண்டி சிங்கம், திருக்குறள் உரை என பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார்.
மேலும், முரசொலி எனும் நாளிதழை நிறுவி அதனை திறம்பட நடத்தி வந்தார். அப்போது அந்த பத்திரிகை வாயிலாக கடிதங்களை தொண்டர்களுக்கு எழுதுவது வழக்கம். அப்படி அவர் 1968 முதல் 2016ஆம் ஆண்டு வரையில் எழுதிய கடிதங்களை தொகுத்து, நூலாக வெளியிடயிட உள்ளனர். 4,051 கடிதங்களை 54 தொகுதிகளாக தொகுத்து வெளியிட உள்ளனர். செப்டம்பர் 15ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்நூலை வெளியிட உள்ளார்.