• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க தமிழக அரசு அனுமதி..

Byகாயத்ரி

Sep 10, 2022

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அக்டோபர் 24ஆம் தேதி தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அக்டோபர் 11ஆம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை தீவுத்திடலில் 55 பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பட்டாசு கடை போடுபவர்கள் தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.