• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

2 லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்?

Byadmin

Oct 11, 2022

பொருளாதார நெருக்கடி காரணமாக இங்கிலாந்தில் 2 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பிரதமர் லிஸ் டிரஸ்சின் நடவடிக்கை.
இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ்டிரஸ், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் இங்கிலாந்தில் 2 லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்து அரசுக்கான செலவை குறைக்க பிரதமர் லிஸ் டிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டன் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் பார் பிஸ்கல் ஸ்டடீஸ் என்ற அமைப்பு, இங்கிலாந்தை கடனில் இருந்து மீட்க அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. பண வீக்கம் அதிகரித்தால் மேலும் ஒரு லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் லிஸ் டிரஸ்சின் இந்த நடவடிக்கையால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.