இலவச பயணம் செய்ய இனி பெண்களுக்கு பிங்க் நிற பஸ்கள் அறிமுகப்படுத்த தமிழக போக்குவரத்துதுறை முடிவு.
பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பார்த்தே பெண்கள் அதில் ஏறி செல்வது வழக்கம். ஆனால் சில பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் உள்ளது. சில ஸ்டிக்கர்களை தூரத்தில் நின்று படிக்க முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மாநகர போக்குவரத்து கழகம் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண பஸ்களை ‘பிங்க்’ நிறத்தில் மாற்றியுள்ளது. இந்த பஸ்கள் அறிமுகத்தின் மூலம் பெண்கள் குழப்பம் இன்றி தூரத்தில் இருந்தே பஸ்களை பார்த்து அதில் ஏறி செல்லலாம். மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த ‘பிங்க்’ நிற பஸ்கள் அடுத்த வாரம் சில வழித்தடங்களில் சோதனை ஓட்டத்தை தொடங்குகிறது. அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அனைத்து இடங்களுக்கும் அவை விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 3,300 பஸ் சேவைகளில்பா தி சாதாரண பஸ் சேவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலவச பயணம் செய்ய பெண்களுக்கு பிங்க் நிற பஸ்கள்
