

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரத்தை சன் பிக்சர்ஸ் இன்று, வீடியோ மூலமாக வெளியிட்டுள்ளது.
டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். பிரியங்கா மோகன், சூரி, வினய் ராய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம், பொள்ளாச்சி சம்பவத்தை மையமாகக் கொண்ட படம் என பல வித தகவல்கள் வெளியாகியுள்ளன.. பிப்ரவரி 4 ம் தேதியே எதற்கும் துணிந்தவன் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்ததால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு, மார்ச் 10 ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் படத்தின் டிரைலர் பற்றி அப்டேட்டை வீடியோ மூலம் சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 2ம் தேதி காலை 11 மணிக்கு எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் வெளியிடப்பட உள்ளது.
அந்த வீடியோவில், சத்யராஜ் வாக்கிங் போய் கொண்டிருக்க, சூர்யா ஒர்க்அவுட் செய்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் சரண்யா, தம்பி…இன்னும் ரெடியாகலியா. எல்லோரும் ஆர்வமாக இருக்காங்க என்கிறார். அதற்கு சத்யராஜ், நான் அதை விட ஆர்வமாக இருக்கேன் என்கிறார். அப்போது சூர்யா, Unexpected ஆ இருக்கும் விடு என்கிறார். சரண்யாவும் குஷியாக, சோக்குடா…சோக்குடா…சீக்கிரம் வாங்டா என சொல்லிவிட்டு போகிறார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இந்த வீடியோ ப்ரோமோவிற்காக எடுக்கப்பட்டதா அல்லது நிஜமாகவே படத்தில் இருக்கிறதா என்ற டிஸ்கஷனில் ஈடுபட்டுள்ளனர்!

