சோஷியல் மீடியாக்களில் பீஸ்ட், வலிமையை தொடர்ந்து மாஸ் காட்ட உள்ளது பொன்னியின் செல்வன்!
காதலர் தினத்தை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் லிரிக்கல் பாடலாக அரபிக்குத்து பாடலை வெளியிட்டது. இகனைதொடர்ந்து, சமூகவலைத்தளங்களில் அராபிக் குத்து அதிகம் பேசப்பட்டது! அதனைத்தொடர்ந்து, வலிமை ரிலீஸ்! ப்ரோமோவில் தொடங்கி, வலிமை முதல் நாள் வசூல் வரை என இணையமே அஜித் ரசிகர்களால் களேபரமானது!
லேட்டஸ்ட் தகவல்படி, வென்றால், வரும் வாரத்தில் பீஸ்ட் படத்தின் டீசரும், டைரக்டர் மணிரத்னம் இயக்கி உள்ள பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தின் டீசர், டிரைலர் ஆகியன வெளியிடப்பட உள்ளதாம். அதுவும் படத்தில் நடித்துள்ளவர்களின் கேரக்டர் அறிமுகத்துடன் டீசர் வெளியிட போகிறார்களாம். வெறும் டீசர் மட்டுமின்றி அதோடு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாக உள்ளதாம்.
இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படம் ரிலீசுக்கு தயாராகி விட்டதாம். போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறதாம். உலகின் பல நாடுகளிலும் இந்த படத்திற்கு கிராஃபிக்ஸ் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணிகள் கிட்டதட்ட முடிவடையும் நிலையில் உள்ளனவாம். அதனால் ரிலீசிற்கான ஏற்பாடுகளை துவக்க படக்குழு தீவிரம் காட்டி வருகிறதாம்.
மேலும், ரஜினி, விஜய், அஜித் படங்கள் தீபாவளியை குறிவைப்பதால் டிசம்பரில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.