• Fri. Apr 26th, 2024

ஒளிரும் இந்தியாவின் புகைப்படம்…

Byகாயத்ரி

Feb 1, 2022

ஒளிரும் இந்தியாவின் அசத்தலான செயற்கைகோள் படம் வெளியாகி கண்களுக்கு விருந்தளித்துள்ளது. 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது இந்தியா அதிக அளவில் மின்சார வசதி பெற்றிருப்பது செயற்கை கோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் 2021 – 22 ஆண்டுக்கான பொருளாதார கணக்கெடுப்பு மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், செயற்கைகோள் மற்றும் புவிசார் தரவுகளின் பயன்பாடு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் 2012 மற்றும் 2022ஆம் ஆண்டுகளின் இந்தியாவின் இரவு நேர செயற்கைகோள் புகைப்படம் ஒப்பிடப்பட்டுள்ளது. அந்த இரவு நேர புகைப்படம், மின்சார பயன்பாடு மற்றும் விநியோகம் நாடு முழுவதும் பரலாக்கப்பட்டிருப்பதை காட்டுகிறது.

பொருளாதார கணக்கெடுப்பு என்பது மிகவும் பாரம்பரியம் மிக்கது. இது 1950 – 51 முதல் சமர்ப்பிக்கப்படுகிறது. 1964 வரை பட்ஜெட் உடன் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார கணக்கெடுப்பு அதன்பிறகு பட்ஜெட்டுக்கு முதல் நாள் சமர்ப்பிக்கப்படுகிறது. பொருளாதார கணக்கெடுப்பு கடந்த நிதியாண்டின் பொருளாதாரத்தின் செயல்திறனை மதிப்பாய்வு செய்கிறது. முக்கிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசின் கொள்கை நிலையை பகிர்ந்து கொள்கிறது.இந்த ஆய்வு பொருளாதார விவகாரங்கள் துறையின் தலைமை பொருளாதார ஆலோசகரால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *