மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளில் 10 முக்கிய அறிவிப்புகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
- டிஜிட்டல் கரன்சி
பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி, ரிசர்வ் வங்கியால் 2022-23 நிதியாண்டில் வெளியிடப்படும். டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படும். இது பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும். டிஜிட்டல் கரன்சி குறித்த அறிவிப்பின் எதிரொலியாக பங்குச்சந்தையில் ஏற்றம் அடைந்துள்ளன.
- 5ஜி ஏலம்
5ஜி தொலைத் தொடர்புக்கான அலைவரிசை (Spectrum) ஏலம் 2022-23ல் நடத்தப்படும். 2022-23ம் ஆண்டிலேயே 5ஜி மொபைல் சேவை தொடங்கப்படும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 5ஜி உபகரணங்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்படும்.
- நதிகள் இணைப்பு திட்டம்
ரூ.44,605 கோடியில் நீர்ப்பாசன இணைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும். கங்கை – கோதாவரி, கிருஷ்ணா – காவிரி, காவிரி – பெண்ணாறு உட்பட 5 நதிகள் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதல் கிடைத்தவுடன் நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் தென்னக மாநிலங்கள் பலனடையும்.
- ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி திட்டம்
பள்ளிக்கல்வியை மேம்படுத்த ‘ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி’ திட்டத்தின் மூலம் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், மாநில மொழிகளில் கல்வி பயில்வதற்கான தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை 12ல் இருந்து 200 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 60 லட்சம் பேருக்கு வேலை
மேக் இன் இந்தியா திட்டம் மூலம், 14 துறைகளில், அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டம்
- 400 வந்தே பாரத் ரயில்கள்
அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இயக்கப்படும், 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
- அனைத்து கிராமங்களில் இணைய வசதி
பாரத் நெட் திட்டத்தின் கீழ், 2025ம் ஆண்டுக்குள் Fiber Optic முறையில் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி ஏற்படுத்தப்படும். பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பில் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு லட்சம் கோடி வட்டியில்லா கடன்
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக மாநிலங்களுக்கும் உதவும் வகையில் வட்டியில்லா கடன் வழங்க ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
- வருமானவரி – 2 ஆண்டு அவகாசம்
வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் போது தவறு ஏற்பட்டால் அவற்றை திருத்திக் கொள்ளலாம். திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படுகிறது.
- கிரிப்டோ கரன்சி – 30% வரி
பிட் காயின் போன்ற டிஜிட்டல் சொத்துக்கள் மூலம் பெறப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும்
இதுவரை இல்லாத வகையில் ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி வருவாய் 1.40,986 கோடியாக அதிகரித்துள்ளது எனவும் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே இந்த அளவுக்கு ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகரித்திருப்பது பொருளாதார மீட்சி நிலையை காட்டுகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அதே போல இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக வருமானவரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் ஏற்படவில்லை, வருமான வரி விலக்கு உச்சவரம்பு 2.5 லட்ச ரூபாயாகவே தொடரும்.
- அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின்தான்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேச்சு.ஸ்டாலினுக்கு பிறகு அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் என கே..கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் […]
- ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெருநகரங்களில் ஓலா, ஊபர் போன்ற வாகனங்கள் […]
- காங்கிரஸ் குறித்து பிரசாந்த் கிஷோர் பரபரப்பு டூவிட்குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் பிரசாந்த் கிஷோர் பரபரப்பு தகவல்கடந்த சில தினங்களுக்கு […]
- ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்தமிழகத்தில் பணிபுரியும் ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்- என மத்திய ரெயில்வே அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் […]
- முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகழுகுமலையில் முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகொடியேற்றத்துடன் துவங்கியது .அதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கழுகுமலை மேலக்கேட் […]
- இரு ரயில்வே சங்க நிர்வாகிகளுக்கிடையே அடிதடிமதுரையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், இரு ரயில்வே சங்க நிர்வாகிகள் அடிதடி ஈடுபட்டதால் பரபரப்பு.’சதர்ன் […]
- மீண்டும் வருகிறாள் சந்திரமுகி… விரைவில்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே […]
- காங்கிரஸ் கட்சிக்கு அவமானமாக இல்லையா…? குஷ்பு சாடல்இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பேரறிவாளன் அனுபவித்து வந்தார். […]
- கள்ளச்சாரயத்தை ஒழிக்க வீதியில் இறங்கி போராடுவோம் – எடப்பாடிபழனிசாமிதமிழக அரசு கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை […]
- வாட்ஸ்-அப் பயனாளிகளுக்கு விரைவில் புதிய வசதிவாட்ஸ் அப் இல்லைஎன்றால் உலகமே முடங்கிவிடும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துவருகிறது.புகைப்படங்கள்,வீடியோக்கள்,வீடியோகாலில் பேச, என தனிப்பட்ட […]
- பல வெற்றிகளை குவித்த குத்துச்சண்டை வீரர், மரணத்திடம் தோல்வி..குத்துச்சண்டையில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஜெர்மனி வீரர் மூசா யாமக் போட்டிக்களத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த […]
- பாலியல் குற்றச்சாட்டு-எலான்மஸ்க் மறுப்புவிமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உலகின் முதன்மை பணக்காரர்களுள் […]
- மொழியை வைத்து சர்ச்சை… பிரதமர் விமர்சனம்…இந்தியாவில் அண்மைக்காலமாக மொழியை வைத்து சர்ச்சையை கிளப்ப முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். […]
- முன்கூட்டியே துவங்குகிறது தென்மேற்கு பருவமழைதென்மேற்கு பருவமழை ஜூன் முதல் அல்லது 2 வாரத்தில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு 10 […]
- திவாலான இலங்கை அரசு… இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு…இலங்கை அரசு திவால் ஆகிவிட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. […]