• Wed. Dec 11th, 2024

பெட்ரோல் விலை விரைவில் குறையும்”!!-அமைச்சர் நம்பிக்கை

ByA.Tamilselvan

Jan 23, 2023

எண்ணெய் நிறுவனங்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு கட்டிய பிறகு பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 15 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. அதேநேரத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 116 டாலர்களாக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, தற்போது 82 டாலர்களாகக் குறைந்துள்ளது. எனவே தான் பெட்ரோல் விலை குறையும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை ஏற்பட்ட இழப்புகளை சரிக்கட்டிக் கொள்ளும் பணியை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.