மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 14வது வார்டு பகுதியான கோட்டைமேடு செல்லும் பகுதியில் நாயக்கர் புது தெரு குடியிருப்பு பகுதியில் தெருக்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாக வார்டு பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வாடிப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது சுமார் 20,000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சியின் 14 வது வார்டு பகுதியான கோட்டைமேடு செல்லும் பகுதியில் தெருக்களில் கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் தேங்கி குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்கு முன்பு தேங்கி கிடக்கிறது குறிப்பாக நாயக்கர் புது தெரு பகுதியில் தெருக்களில் கழிவு நீர் தேங்கி சாலைகளில் பச்சை நிறத்தில் ஆறாக ஓடுகிறது.

மேலும் பல நாட்கள் கழிவு நீர் தெருகளில் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறி செல்லும் நிலையில் கழிவுநீரை வெளியேற்ற வடிகால் வசதி முறையாக செய்யப்படாத நிலையில் வீடுகளுக்கு முன்பு கழிவுநீர் பச்சை நிறத்தில் தேங்கி கிடக்கிறது. இதனால் குழந்தைகள் வயதானவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பேரூராட்சி அதிகாரிகள் கழிவுநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விரிவாக்க பகுதிகளில் கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். மதுரை மாவட்ட நிர்வாகம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் பணிகளை முறையாக மேற்கொண்டு கழிவு நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மழை காலங்களில் மழை நீருடன் கழிவுநீரும் சேரும் போது பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அச்சமடைந்துள்ளனர். ஆகையால் அதற்குள் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




