• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை

Byமதி

Oct 22, 2021

கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து வந்த நிலையில், நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.61-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.56 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்றும் பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.103.92-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரிது ரூ.99.92-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.