• Fri. Apr 26th, 2024

வங்கதேச தாக்குதல்; மோடி மவுனம் ஏன்?” – சுஷ்மிதா தேவ்

Byமதி

Oct 22, 2021

வங்கதேச நாட்டில் சிறுபான்மையின மக்களான இந்து சமுதாய மக்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். பங்களாதேசில் 22 மாவட்டங்களில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை பரவியுள்ளது. பல இடங்களில் சிலைகளை உடைத்து துர்கா பூஜை பந்தல்கள் சேதப்படுத்தி உள்ளனர். 150க்கும் மேற்பட்ட வீடுகள் உடைக்கப்பட்டு பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட உள்ளன. பல இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடமைகளும் சூறையாடப்பட்டுள்ளன.

இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி ஏன் இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருகிறார் என்ற கேள்வியை பாஜக எழுப்பி இருந்தது.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக,
“பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்? இந்த விவகாரத்தில் பிரதமரின் நிலைப்பாடு என்ன என்பதை பாஜக கேட்டறிய வேண்டும். இந்தியா எப்போதுமே சிறுபான்மையின மக்களின் மனித உரிமை மற்றும் பாதுகாப்பிற்காக முன்நின்றுள்ளது. அதனால் பிரதமர் இந்த விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டுக்கு வர வேண்டும். ஒரு நாட்டின் சார்பாக நமது செயல்பாடு இருக்கு வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கானதாக இருக்க கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *