

மதுரை மாவட்டம் அவனியாபுரம் வில்லாபுரம் மேற்கு பகுதி 100வது வார்டில் உள்ள பாப்பாமடை முனியாண்டி திருக்கோவில் அருகிலும், அம்பேத்கர் நகர் ரமண ஸ்ரீ கார்டன் பகுதியில் பெரும்பாலான குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதி முழுவதும் குப்பைகள் அள்ளாமலும் குப்பைகள் எரிக்கப்பட்டும் வருவதால் அந்தப் பகுதி புகை மண்டலமாக காட்சி அளிப்பதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதனால் பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் வயதானவர்களும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று தமிழக இந்து மகா சார்பாக மாநில ஆலய பாதுகாப்பு தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் பக்தர்கள் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

