
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஜி. கல்லுப்பட்டியில் உள்ள சுடுகாட்டில் ஈமச்சடங்கு செய்வதற்கு தேவையான தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற தலைவி மகேஸ்வரியிடம் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்த கோரிக்கை மனு வழங்கும் நிகழ்ச்சியில் பெரியகுளம் ஒன்றிய இணைச் செயலாளர் சுப்புராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் குமார், ஒன்றிய பொருளாளர் தினேஷ் பாண்டியன்,கெங்குவார்பட்டி கிளைச் செயலாளர் முருகன் உள்ளிட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
