• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தனியார் பள்ளி ஆசிரியையிடம் பட்டப் பகலில் ஆறு பவுன் நகை திருடிய இரண்டு பெண்கள் கைது..,

ByKalamegam Viswanathan

Aug 18, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் மார்க்கெட் ரோடு பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் ராஜலட்சுமி என்பவரை கையை கட்டி வாயை பொத்தி பட்டப்பகலில் ஆறு பவுன் செயினை நேற்று முன்தினம் பர்தா அணிந்து வந்த இரண்டு பெண்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து ராஜலட்சுமி சோழவந்தான் காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆறு பவுன் செயினை கொள்ளையடித்து சென்றது.

சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தைச் சேர்ந்த அன்னபூரணி வயது 41 மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி வயது 36 ஆகிய இருவர் என்பது தெரிய வந்த நிலையில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதில் அன்னபூரணி என்பவர் ராஜலட்சுமியின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது. ராஜலெட்சுமியிடம் தோழியாக நெருங்கி பழகிய நிலையில் கனிமொழி என்பவரை உடன் அழைத்துச் சென்று ஆறு பவுன் செயினை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.