• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பெரியநாயக்கன்பாளையம் – சைக்கிளில் சென்றவர் மீது மோதிய தனியார் பேருந்து – சம்பவ இடத்திலேயே முதியவர் பலி.

BySeenu

Mar 7, 2024

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி 75 வயதான இவர் அதே பகுதியில் குடிநீர் பணியாளராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சைக்கிளில் சென்ற போது கோவையிலிருந்து அதிக வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியது.

இதில் முதியவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக முதியவர் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்போது கட்டப்பட்ட பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் அதி வேகமாக இயக்கப்படுவதால் இந்த விபத்துக்கள் ஏற்படுவதாகவும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.