• Fri. Jan 27th, 2023

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி வரலாற்று நாயகர் பெரிய வெண்ணிக்காலாடி

ByAlaguraja Palanichamy

Dec 19, 2022

தமிழ்நாட்டின், தென் தமிழகத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த மாவட்டம், தற்போது தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள வாசுதேவநல்லூர் அருகில் சேவல்நெல்கட்டும் சேவலின் பெரிய வெண்ணிக்காலாடி புலித்தேவனின் முப்படைகளின் மூத்த போர்படை தளபதி பெரிய வெண்ணிக்காலாடி ஆங்கிலேய இஸ்லாமிய மன்னரை எதிர்த்துப் போரிட்டு உயிர் துறந்தார்.
இந்தியா தனது 75 ஆவது சுதந்திர அமிர்த பெருவிழாவை கொண்டாடி வருகிறது. முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் 75-வது சுதந்திர தின அமிர்த பெருவிழக் கண்காட்சியை பேராசிரியர். முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி நேரில் சென்று பார்வையிட்ட போது இந்திய தேசத்தை பெருமைப்பட வைக்கும் வகையில் உயிர் தியாகம் செய்த நெல்கட்டும் சேவலின் முப்படைகளின் மூத்த தளபதி பெரிய வெண்ணிக்காலாடி படம் இல்லாமல் இருந்ததே சுட்டிக்காட்டி தினக்காற்று நாளிதழில், இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி , உள்துறை அமைச்சர் அமித்ஷா , பி.ஜே.பியின் தேசியத் தலைவர் ஜே. பி. நட்டா , துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஜி , தமிழக பாரத ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை , இந்திய அரசு தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின், இணை அமைச்சர் எல். முருகன் , பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கோரிக்கை விடுத்திருந்தேன்.

மத்திய அரசு கோரிக்கையை ஏற்று சென்னையில் 75 ஆவது சுதந்திர தின அமிர்த பெருவிழா கண்காட்சி இல் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்று அதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு கண்காட்சியில் புலித்தேவரின் ஒவ்வொரு போர் வீகத்தையும் சிந்தித்து வெற்றிகரமாக செயல்படுத்தியவர் முப்படைகளின் மூத்த தளபதி பெரிய வெண்ணிக்காலாடி படம் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் வாழும் இரண்டு கோடி தேவேந்திரகுல வேளாளர்களின் சமுதாய மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனை இடம்பெறச் செய்ய வைத்த இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி , உள்துறை அமைச்சர் அமித்ஷா , பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே. பி. நட்டா , துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஜி , தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை , ஒளிபரப்பு துறை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் , பாரதிய ஜனதாவின் பொதுச் செயலாளர் சீனிவாசன் , மற்றும் ஜே.காமராஜ் (I.I.S.UPSC) இயக்குனர், , மண்டல அவுட்ரீச் பீரோ, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், சென்னை மற்றும் கண்காட்சி குழுவினருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்..
இந்நாளில் பல பெரும் விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவில் கொள்வது வாடிக்கை நாட்டுக்காகவும், விடுதலைக்காகவும், தங்களின் இன்னுயிர் துறந்த சில வீரர்களையும் நினைவு கூறுகிறோம். அப்படி நினைவு கூறப்பட வேண்டிய ஒருவர்தான் பெரிய வெண்ணிக்காலாடி அல்லது பெரிய காலாடி என்பவர் புலிதேவன் படையின் முப்படைகளின் மூத்த போர்படை தளபதி ஆக இருந்தவர் பெரிய வெண்ணிக்காலாடி தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவர் (காலடி என்ற பெயர் போர்ப்படையில் காணப்பட வீரர்களே குறிப்பாகும்). புலித்தேவனை நேரில் சென்று எதிர்க்க முடியாது என்று எண்ணிய ஆங்கிலேய அரசர் கான்சாஹிப், இரவில் புலித்தேவரின் கோட்டையை முற்றுகை இடலாம் என்று தீர்மானித்தார். இதற்காக கான்சாகிப்பின் படைகள் காட்டில் முகாமிட்டிருந்தது.


இந்த செய்தியை அறிந்த பெரிய வெண்ணிக்காலாடி சில வீரர்களுடன் சென்று முகாமை தாக்கினார் அப்போது எதிர் வீரன் ஒருவன் மறைந்திருந்து தாக்கியதால் காயம் உற்றார், பெரிய காலாடி வயிறு கிழிக்கப்பட்டு, குடல் வெளியே வந்த நிலையில், தன் தலைப்பாகையாக கட்டியிருந்த துண்டை எடுத்து வெளியே வந்த தன் குடலை மீண்டும் வயிற்றுக்குள் தள்ளி, தன் வயிற்றை துண்டால் கட்டிக்கொண்டு, எதிரிகளுடன் சண்டையிட்டு அவர்களை தோற்கடித்தார். தான் எதிரிகளை தோற்கடித்ததையும் அவர்கள் படையுடன் காட்டில் சென்று பதுங்கிருப்பதையும் தெரிவிக்க சூறாவளியை போல் தன் குதிரையை செலுத்தி புலித்தேவரிடம் வந்தடைந்தார். பலத்த காயத்துடன் வந்த பெரிய வெண்ணிக்காலாடி யைபுலித்தேவர் தன் மடியில் கிடைத்தி நடந்தவற்றை கேட்டுக் கொண்டிருந்த நேரம் செய்தியை கூறிவிட்டு மரணம் அடைந்தார்.
தன் தளபதி பெரிய காலடி எதிரிகளுடன் போரிட்டு மரணம் அடைந்ததை இடத்தில் பிற்காலத்தில் புலித்தேவர் வீரக்கல் ஒன்றை நட்டு வைத்தார். அந்த இடம் இன்னும் பகுதி மக்களால் காலடி மேடு என்று அழைக்கப்படுகிறது.

  • பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி, M.Tech., Ph.D.,PDF.,
    மத்திய அரசின், அறிவியல் மற்றும் தகவல் நுட்ப துறையில்,-DST Inspire Award (2011) விருது பெற்றவர். Mobil No: 9843466301

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *