புதுச்சேரி காவல்துறை டிஐஜி சத்திய சுந்தரம் ஐபிஎஸ் அவர்கள் தலைமையில் காரைக்கால் மாவட்டத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் புதுச்சேரி காவல்துறை சார்பில் புதுச்சேரி டிஜிபி ஷாலினி சிங் அவர்களின் உத்தரவின் படி மக்கள் மன்றம் என்ற பொதுமக்களின் புகார்களை கேட்டறிந்து அவர்களுக்கு உரிய தீர்வு அளிக்கும் குறை தீர்ப்பு முகாம் நடைபெறும். அதேபோல் இவ்வாரம் இன்று மக்கள் மன்றம் நிகழ்ச்சி காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதுச்சேரி டிஐஜி சத்திய சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் செல்வி. லட்சுமி சௌஜன்யா, ஐபிஎஸ், காரைக்கால் மாவட்ட காவல்துறை ஆய்வாளர்கள் மரி கிறிஸ்டியன் பால், செந்தில்குமார், பிரவீன் குமார், மர்தினி, லெனின் பாரதி, புருஷோத்தமன், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றியும் மற்றும் ஜீரோ எஃப் ஐ ஆர் ஆகியவை குறித்தும் புகார் அளிக்க வந்த பொதுமக்களிடம் புதுச்சேரி காவல்துறை டிஐஜி சத்திய சுந்தரம் விவரித்து விழிப்புணர்வு அளித்தார். மேலும் மக்கள் மன்றம் நிகழ்ச்சி புதுச்சேரி காவல்துறை டிஜிபி அவர்களின் உத்தரவின்படி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்கள் தனிப்பட்ட முறையில் புகார்கள் ஏதேனும் இருந்தால் தன்னிடம் தெரிவிக்கலாம் என்றும் பெறப்படும்.
புகார்கள் அனைத்தும் உரிய காலங்களில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து புதுச்சேரி காவல் துறையில் பயிற்சி பெற்ற முப்பது பெண் கமாண்டக்களில் காரைக்கால் மாவட்டத்திற்கு நான்கு பெண் கமாண்டோகளை காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் செல்வி. லட்சுமி சௌஜன்யா, ஐபிஎஸ், அவர்கள் புதுச்சேரி காவல்துறை டிஐஜி சத்ய சுந்தரம் முன்பு அறிமுகம் செய்து வைத்தார். அவர்களை மக்கள் மன்றம் நிகழ்ச்சிக்கு வருகை தந்த மக்கள் மத்தியில் டிஐஜி சத்ய அறிமுகம் செய்து வைத்தார்
இதனை தொடர்ந்து புதுச்சேரி காவல்துறை டிஐஜி . சத்திய சுந்தரம், ஐபிஎஸ், அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது: இன்று நடைபெற்ற மக்கள் மன்ற நிகழ்ச்சியில் பொது மக்களின் வருகை மக்கள் மன்றம் நிகழ்ச்சிக்கு மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. வருகை தந்த பொதுமக்களிடம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்டம் குறித்தும் மற்றும் ஜீரோ எஃப் ஐ ஆர் குறித்தும் விவரிக்கப்பட்டது. மேலும் புதுச்சேரியில் பயிற்சி பெற்ற நான்கு பெண் கமாண்டோகளை காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து வேலை மற்றும் கடன் வாங்கி தருவதாக பொய்யாக கூறி பொதுமக்களிடமிருந்து ஆவணங்களை பெற்றுக்கொண்டு மோசடிகளை சைபர் குற்றவாளிகள் செய்து வருகின்றனர் அவ்வாறு நம்பிக்கை தன்மை இல்லாத விளம்பரங்களை நம்பி தொலைபேசி எண் மூலம் தங்களது ஆவணங்களை கொடுக்க வேண்டாம் என்றும், மேலும் சைபர் ரீதியான குற்றங்களை உடனடியாக பொதுமக்கள் குற்றத்தடுப்பு பிரிவில் புகார் அளிக்க வேண்டும் அல்லது 1930 என்ற எண்ணிற்கு தங்களது புகார்களை பதிவு செய்யும் பொருட்டு அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஐஜி அறிவுறுத்தினார்.
தொடர்ந்து புதுச்சேரியில் அறிமுகம் செய்யப்பட்ட கைரேகை நிபுணர் பிரிவு வாகனம் போன்று காரைக்கால் மாவட்டத்திற்கு ஒரு வார காலத்திற்குள் கைரேகை நிபுணர் பிரிவு வாகனம் ஒன்று புதிதாக வழங்கப்பட உள்ளது எனவும். காரைக்கால் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் திருநள்ளாறு பகுதியில் போக்குவரத்து காவல் நிலையம் நிறுவப்பட உள்ளது என டிஐஜி சத்திய சுந்தரம் தெரிவித்தார்.