• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

கேரளாவைச் சேர்ந்த வாலிபர் ரூ. 5.10 கோடி மோசடி..,

ByB. Sakthivel

May 14, 2025

புதுச்சேரி மேட்டுப்பாளையம் தனியார் நிறுனத்தின் கணக்காளர் சுகியா. இவருக்கு அவர் பணபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் புகைப்படத்துடன் கூடிய வாட்ஸ் ஆப் கால் வந்தது. அதில் பேசிய நபர் உரிமையாளர் போல் பேசி தான் தொடங்க உள்ள புதிய திட்டத்திற்கு பணம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய சுகியா இணைய வழி மோசடிக்காரர்களின் வங்கி கணக்குகளில் பல தவணைகளாக 5.10 கோடி ரூபாயைஅனுப்பி உள்ளார்.

இந்நிலையில் உரிமையாளர் போனில் பேசியபோது, சுகியா பணம் அனுப்பிய விபரத்தை கூறினார். அதிர்ச்சி அடைந்த உரிமையாளர், பணம் அனுப்பிய வங்கி கணக்குகள், வாட்ஸ் ஆப் கால்களை ஆய்வு செய்ததில், அவரது புகைப்படத்தை வைத்து மர்ம நபர்கள் மோசடி செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சைபர் குற்றவாளிகள் மோசடி செய்து பெற்ற ரூ.5.10 கோடியில், ரூ.3 கோடி மேற்கு வங்கம், முர்ஷிதாபாத் வங்கி கிளைக்கு மாற்றப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த வங்கி கணக்கின் உரிமையாளரான மேற்கு வங்க மாநிலம், முஷராபாத் மாவட்டத்தை சேர்ந்த மொபிகுல் ஆலம் மற்றும் அவரது கூட்டாளியான நஸீபுல் இஸ்லாம்(34) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில், மற்றொரு வங்கி கணக்கில் ரூ.1.80 கோடி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த சரத் என்பவரின் வங்கி கணக்கிற்கு சென்றது என தெரியவந்ததை தொடர்ந்து கேரளாவில் தலைமறைவாக இருந்த சரத்தை சைபர் கிரைம் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து,புதுச்சேரி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.